கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்காக, தேர்தல் ஆணையத்தில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதால், மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும், முதியவர்களையும் எளிதில் அடையாளம் கண்டு, தடுப்பூசி போட பரிந்துரைப்பதற்கு ஏதுவாக, வாக்காளர் பட்டியல் தகவல்களை பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முறைபடி அனுமதி கோரியது.
இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பதோடு, அனைத்து வகையிலும் உதவத் தயார் என்றும் உறுதி அளித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.