புதுடெல்லி ரயில் நிலையத்தைப் புதுப்பித்துக் கட்டும் திட்டத்துக்கு முதலீட்டாளர்களை வரவேற்றுள்ள ரயில்வே துறை, நிலையத்தின் தோற்றம் பற்றிய படங்களை வெளியிட்டுள்ளது.
நாட்டில் முதன்மையான நகரங்களில் உள்ள 62 ரயில் நிலையங்களைப் பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டதாகப் புதுப்பித்துக் கட்டுவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. வடிவமைத்துக் கட்டி நிதியுதவி செய்து இயக்கி மாற்றும் திட்டத்தில் இந்தப் பணிகளை முடிக்க ரயில் நில மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தில் பங்கேற்க இணையவழியில் உலகளாவிய நிறுவனங்களிடம் டெண்டர்களை வரவேற்றுள்ளது. புதுப்பித்தபின் புதுடெல்லி ரயில் நிலையம் எப்படித் தோன்றும் என்பதற்கான படங்களை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார்.