தெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 3 பேர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிட்டியாலா சந்திப்பில், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 3 பேர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
கார் வேகமாக வந்து கொண்டிருந்த போது, குறுக்கே பைக் வந்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், விபத்து நடந்ததாக கூறப்படும் நிலையில், கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.