இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை இம்மாத இறுதிவரை நீட்டித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தவுடன் கட்டாயமாக சுய ஊதிய ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உருமாறிய கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும், 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.