பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்டம் ரூபாய் 30 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும சதானந்தா கவுடா ஆகியோர் இதனைத் தொடங்கி வைத்தனர். கீழ் எலசென்னஹல்லியில் இருந்து சில்க் இன்ஸ்டிட்யூட் வரையிலான தெற்கு வழித்தடத்தில் ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன.
பெங்களூரு மெட்ரோவின் இரண்டாவது கட்டம் 74 கிலோ மீட்டட்ர நீளத்தில் 62 நிலையங்களோடு, ஊதா மற்றும் பச்சை வழித்தடங்களின் நீட்சியாக செயல்படும்.