வாட்ஸ் ஆப் தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் வாட்ஸ் ஆப் தனது விதிகளையும் தனிநபர் கொள்கைகளையும் மாற்றி, பயனாளர்கள் அதற்கு உடன்படா விட்டால் தங்கள் கணக்கை நீக்கி விடும்படி அறிவித்துள்ளது.
இதனால் தங்கள் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படலாம் என்ற அச்சம் அதன் வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது.பல லட்சம் பேர் தங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை நீக்கி விட்டு இதர செயலிகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர்.