விவசாயிகளின் சிக்கலைப் பேசித் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் விலகிக் கொண்டார்.
புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தடை விதித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளைக் கேட்டுப் பரிந்துரை அளிக்க நால்வர் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் உள்ள நால்வருமே வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்பதால் இதை ஏற்கப்போவதில்லை என விவசாய சங்கங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து தான் விலகிக்கொள்வதாகப் பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் விவசாயிகளின் பக்கமே எனவும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.