தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற திருக்குறளின் தன்மையை உணர்ந்து நாம் அனைவரும் செயல்படவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
சென்னை மூலக்கடை அருகே பொன்னியம்மன்மேடில் உள்ள கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய மோகன் பகவது பொங்கல் பானைக்கும் சூரியனை நோக்கியும் தீபாராதனை காட்டினர். கோயிலின் உள் நடந்த கோ பூஜையிலும் கலந்து கொண்ட அவர், சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்தார்.