வங்கிகளிடம் கடன் வாங்கி ரூபாய் 200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த Steel Hypermart India Private Limited என்ற தனியார் நிறுவனம் அதன் இயக்குனர்கள், அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பெங்களூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தற்போது பேங்க் ஆப் பரோடாவுடன் இணைந்த விஜயா வங்கி மற்றும் இந்தியன் வங்கியில் பெற்ற கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் இந்நிறுவனம் மோசடி செய்திருப்பதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.