கறிக்கோழி, முட்டைகள் போன்றவற்றின் கொள்முதலுக்கு தடை விதிக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
பத்து மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் கோழி இறைச்சிக்கும் முட்டைக்கும் தடை விதித்துள்ளன.
ஆனால் நன்கு சமைக்கப்பட்ட சிக்கன், முட்டை சாப்பிடுவதால் பறவைக்காய்ச்சல் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் இறைச்சி வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய மீன்வள அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.