மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தொழில் தொடங்கும் முயற்சியாகப் பெங்களூரில் ஓர் அலுவலகத்தை அமைத்துள்ளது.
இந்தியாவில் காற்று மாசைக் குறைக்க மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் ஊக்கமளித்து வருகின்றன. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு தனது காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதற்கு முதற்படியாகப் பெங்களூரில் தனது பதிவு அலுவலகத்தைத் தொடங்கி இயக்குநர்களாக மூவரை நியமித்துள்ளது.
தொழில்நுட்பம், விமானவியல், விண்வெளித்துறை ஆகியவற்றின் தலைமையிடமாக விளங்கும் பெங்களூரில் டெஸ்லா நிறுவனம் கால் பதித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கர்நாடகத் தொழில்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.