ஜார்கண்ட் மாநிலத்தில் காகங்கள், மைனாக்கள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 500 பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏராளமான மைனாக்கள் மற்றும் காகங்கள் இறந்து கிடந்தன. இதையடுத்து ஏற்பட்ட பீதியைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 500 பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.