வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு முன் ஆஜராகப் போவதில்லை என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த முடிவை திங்கட்கிழமை இரவே தெரிவித்து இருப்பதாக பாரதிய கிசான் யூனியன் மற்றும் கிரந்திகாரி கிசான் யூனியன் அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் மத்திய அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற உத்தரவிடலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 3 சட்டங்களும் வாபஸ் பெறப்படும் வரை டெல்லி எல்லையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.