நாட்டின் பாதுகாப்பிற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருப்பதாக ராணுவத் தளபதி நரவானே கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவுடன் எல்லையில் நிலவும் மோதல் போக்குக்கு அமைதி வழியில் தீர்வு காணலாம் என்று இந்தியா நம்புவதாகவும், அதே நேரத்தில் எத்தகைய நிகழ்வுகளையும் சந்திக்க ராணுவம் தயாராக உள்ளதென்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் வடக்கு எல்லை பகுதிகளில் ராணுவம் அதிகபட்ச உஷார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், எல்லையில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவும், பாகிஸ்தானும் ராணுவம் மற்றும் ராணுவம் அல்லாத துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்து வருவதாக தெரிவித்த நராவனே, அந்த 2 நாடுகளாலும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.