பறவை காய்ச்சல் பீதியால் கோழி சந்தைகளை (poultry-markets) மூட வேண்டாமென்று அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவை காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, காஜிபூர் ((ghazipur)) சந்தையை 10 நாள்களுக்கு மூடுவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நன்கு வேகவைத்த அல்லது சமைத்த கோழி இறைச்சி, முட்டையை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாது என்பதால், மக்களிடையேயான அச்சம், குழப்பத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.