மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் (toxic liquor) குடித்து 11 பேர் பலியாகியுள்ளனர்.
மோரெனா மாவட்டம் பகவாலி, மான்பூர் கிராமங்களைச் சேர்ந்த பலர் நேற்றிரவு சாராயம் அருந்தியுள்ளனர். இதையடுத்து உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பகவாலி கிராமத்தை சேர்ந்த 3 பேரும், மான்பூர் கிராமத்தை சேர்ந்த 8 பேரும் பலியாகியுள்ளனர்.
மேலும் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை பாதித்து 7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில் அவர்கள் அருந்திய சாராயமே மரணத்துக்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.