தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
நாதுராம் கோட்சே உறுப்பினராக இருந்த அகில பாரத இந்து மகாசபை சார்பில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு தேசிய பக்தியை ஊட்டவும், நாட்டு பிரிவினையை கோட்சே ஏன் எதிர்த்தார் என புதிய தலைமுறைக்கு விளக்கவும் இந்த நூலகம் பயன்படுத்தப்படும் என இந்து மகாசபை தேசிய துணைத் தலைவராக இருக்கும் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.