வாரணாசியைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.மாயா சங்கர் பத்தக் ஒரு கும்பலால் அடித்து உதைக்கப்பட்டார்.
அவருடைய கல்லூரியில் படிக்கும் மாணவியை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் பத்து பேர் அவரை வழிமறித்து சரமாரியாக அடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் எட்டு நாட்களுக்கு முன்பு அந்த மாணவி குடியரசுதின உரையை தம்மிடம் காட்ட வந்ததாகவும் அதனை தாம் விரும்பவில்லை என்று விரட்டியதால் தம் மீது பொய்ப்புகார் கூறப்பட்டிருப்பதாகவும் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மாயாசங்கர் கூறியுள்ளார்.