ஆதாரின் பயன்பாட்டுக்கு அனுமதியளித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது.
ஆதார் ஒரு இணையற்ற அடையாள அட்டை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வருமான வரி அட்டை போன்றவற்றின் மாற்று அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு மாற்றாக நீதிபதி சந்திரசூட் ஆதார் சட்டரீதியானது அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு விசாரணை நடத்த உள்ளது.