தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் குளிரில் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு, 8 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவுகள் ஏதும் எட்டப்படாததை அடுத்து வரும் 15-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகளை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது.