அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதை அடுத்து, உலகில் அதிகம் பேர் டுவிட்டரில் பின்தொடரும் அரசு தலைவராக பிரதமர் மோடி முதலிடத்திற்கு வந்துள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி அமெரிக்காவை உலுக்கிய நாடாளுமன்ற கலவரத்திற்குப் பிறகு, அதிபர் டிரம்பின் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் முடக்கியது.
டிரம்பை டுவிட்டரில் 8.87 கோடி பேர் பின்தொடர்ந்து வந்தனர். அது முடக்கப்பட்டதால், 6.47 கோடி பின்தொடர்பாளர்கள் உள்ள பிரதமர் மோடி உலகின் நம்பர் ஒன் அரசு தலைவராகி உள்ளார்.
அதே நேரம் 12.79 கோடி பின்தொடர்பாளர்களுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உலகில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவராக நீடிக்கிறார்.