விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் நன்மையே விளையும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புருதுவான் பகுதியில் பிரம்மாண்டமான பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பின்னர் விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
தமது பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜியின் அரசைக் கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் மம்தாவின் கட்சி குற்றங்களை கட்டவிழ்த்து விட்டதாகவும் அவரது ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டதாகவும் சாடினார்.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்றும் ஜே.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்தார்.