அவுரங்கசீப் மதநல்லிணக்கம் உடைய மன்னராக இல்லை என்பதால் அவுரங்காபாத்தின் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கரேயின் பேச்சால் கூட்டணி கட்சியான காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவுரங்காபாத் நகரத்தின் பெயரை மாற்றி, சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜி மகாராஜாவின் பெயரை வைக்க சிவசேனா முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் இதற்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.