சீனாவின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல மாதங்களாக, சீனக் கடலில் சிக்கித் தவிக்கும் 39 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டு வரும் 14 ஆம் தேதி இந்தியா திரும்புவார்கள் என நீர்வழிப்போக்குவரத்து இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்திய சரக்குக் கப்பலான எம்வி ஜாக் ஆனந்த் ஹிபே மாகாணத்தின் ஜிங்டாங் துறைமுகம் அருகே கடந்த ஜூன் 13 முதல் 23 மாலுமிகளுடன் நங்கூரமிட்டு நிற்கிறது. மற்றோர் கப்பலான அனஸ்டாசியா Caofeidian துறைமுகத்தில் கடந்த செப்டம்பர் 20 முதல் 16 பேருடன் நடுக்கடலில் நிற்கிறது.
இந்த கப்பல்கள் துறைமுகத்திற்கு வரவோ, அல்லது மாலுமிகளை மாற்றிக் கொள்ளவோ விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளை சீன அரசு நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் கிரேட் ஈஸ்ட்டர்ன் ஷிப்பிங் கம்பெனி மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் பலனாகஇந்திய மாலுமிகள் எம்வி ஜாக் ஆனந்த் கப்பல் மூலம் இந்தியா திரும்புகின்றனர்.