உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொண்ணூறாக உயர்ந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இருந்து மட்டும் பிரிட்டனில் இருந்து 33 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களில் கொரோனா அறிகுறி உள்ளோருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் உருமாறிய கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை தொண்ணூறாக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று பிரிட்டனில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த அனைவரும் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.