கோவிஷீல்டு தடுப்பூசியை தாமதமின்றி அனுப்பித் தந்து உதவுமாறு பிரதமர் மோடியை பிரேசில் அதிபர் ஜெயிர் போல்ஸோநாரோ கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா மரணங்களில் உலகின் இரண்டாவது நாடாக இருக்கும் பிரேசிலில், மக்களிடையே தடுப்பூசிக்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மோடிக்கு பிரேசில் அதிபர் எழுதிய கடிதத்தை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரேசிலின் தேசிய தடுப்பூசி திட்டத்தை உடனடியாக துவக்க ஏதுவாக, 20 லட்சம் டோசுகளை தாமதமின்றி அனுப்பித் தருமாறு அந்த கடிதத்தில் மோடிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.