மத்திய அரசுடன் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று நடத்திய எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற மத்திய அரசு மறுத்துவிட்டதால் இழுபறி நீடிக்கிறது.
சட்டங்களை ரத்து செய்யாமல் வீடு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர். இன்று 45 வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.
மீண்டும் வரும் 15ம் தேதி பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விரைவில் இப்பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காணப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
சீக்கியர் மதத்தலைவர்களை அழைத்து மத்திய அரசு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாபா லாக்கா சிங் என்ற சீக்கியர் ஆன்மீகத் தலைவர் தோமருடன் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.