மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும், லஷ்கரே தொய்பா முக்கிய தீவிரவாதியுமான சாகிர் ரகுமான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் 6 வருடங்கள் சிறையில் இருந்த அவன் 2015 ஏப்ரல் மாதம் ஜாமினில் வெளியே வந்தான். இந்த நிலையில் அவனை, கடந்த 2 ஆம் தேதி தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் லாகூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஒருவார காலத்திலேயே அவனுக்கு 15 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.