அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்ததை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி உள்ளார்.
இந்த விவகாரத்தில் டிரம்பிடம் இருந்தும், அவரது நிர்வாகத்திடம் இருந்து மோடி விலகி இருந்தது ஒரு நல்ல அடையாளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்திய-அமெரிக்க உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ள தரூர், மோடியின் கருத்து ஒரு தெளிவான நினைவூட்டல் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.