ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கைக் கொல்லக் கூலிப்படையினர் அமர்த்தப்பட்டுள்ளதாக மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து அவருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனுப்புநர் பெயர் இல்லாமல் நவீன் பட்நாயக்குக்கு வந்த கடிதத்தில், அவரைக் கொல்ல ஏ.கே.47 வகைத் துப்பாக்கி ஏந்திய கூலிப்படையினர் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொலைச் சதிக்கு மூளையாகச் செயல்படுபவன் நாக்பூரில் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு ஒடிசா உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் நவீன் பட்நாயக்கின் வீட்டிலும், அலுவலகத்திலும், அவர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.