புதுச்சேரியில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடைபெற்று வருவதால், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம்சாட்டி, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், அண்ணா சதுக்கம் அருகே நடைபெறும் இப்போரட்டத்தில், காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.
அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், மூன்று கப்பேனி துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
350 துணை ராணுவப் படையினரில், 150 பேர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், 200 பேர், போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில், வஜ்ரா மற்றும் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனங்களுடனும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.