கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட நபர்களுக்கு குறைந்தது 8 மாத காலம், அதற்கு எதிரான புதிய நோய் எதிர்ப்பு சக்தி உடலில் தங்கியிருக்கும் என ஆய்வுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லா ஜொல்லா நோய்எதிர்ப்பு ஆய்வு மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், சிலருக்கு, கொரோனாவுக்கு எதிராக புதிதாக உருவாகிற நோய் எதிர்ப்பு சக்தி மேலும் பல காலம் உடலில் நீடிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
200 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உடல் செல்கள் நினைவில் வைத்துக் கொள்வதும், அடுத்த முறை தொற்று ஏற்படாத வகையில் டி.செல்கள் தயார் நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.