பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பகுதியில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் அரசுக்கு எதிரான கொந்தளிப்பு காரணமாக பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருவதற்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
ஆக்ரமிப்பு காஷ்மீரின் அரசு நிர்வாகம் முடமாகிவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் சாடுகின்றன. பாகிஸ்தானின் சர்வாதிகாரப் போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.