வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி தமது கணவர் மயங்க் மேத்தாவுடன் அப்ரூவராக மாறப் போவதாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர இந்திய சிபிஐ அதிகாரிகள் சட்டரீதியான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐக்கு உதவ நீரவ் மோடியின் சகோதரி பூர்வி முடிவு செய்துள்ளார்.
நியுயார்க்கில் 2 குடியிருப்புகளை அதிகாரிகள் கைப்பற்றவும் லண்டன் மும்பை ஆகிய இடங்களில் தலா ஒரு குடியிருப்பைக் கையகப்படுத்தவும் அவர் நீரவ் மோடியின் சொத்துகளைக் குறித்த தகவல்களை அளித்துள்ளார்.
இவற்றின் மொத்த மதிப்பு 579 கோடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.