கொரோனா ஊரடங்கின் போது முன்பதிவு செய்யப்பட்டு ரத்தான டிக்கெட்டுகளுக்கான தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பதிவு டிக்கெட் தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் ஆறு மாதத்தில் இருந்து 9 மாதங்களாக நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, ரயில்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்தவர்கள், ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.