விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் ஏற்கத் தயார் என்றும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாய சங்கங்களுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
நேற்று பிரம்மாண்டமான டிராக்டர் பேரணியைத் தொடங்கியுள்ள விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாக டெல்லியை நோக்கி அணிவகுத்துள்ளனர். குடியரசு தினத்தில் டெல்லியின் அனைத்துப் பாதைகளையும் முடக்கும் வகையில் டிராக்டர் பேரணியை நடத்தவும் திட்டமிட்டுள்ள விவசாயிகள் அதன் ஒத்திகையை இப்போது நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் மணிக்கணக்கில் அணிவகுத்து நின்றன.