காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஸ்ரீநகரின் ஹஸ்ராத்பால் பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. செய்யது எம். அக்கூன் என்பவரது வீட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் எச்.சி.முர்மு என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அதிக பனிப்பொழிவு காரணமாக திடீரென வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேபோல் குப்வாரா மாவட்டம் ஷா மொகல்லா திரிக்காம் என்ற இடத்திலும் பனிப்பொழிவு காரணமாக கூரை இடிந்து விழுந்ததில் ராணி பேகம் என்ற மூதாட்டி உயிரிழந்தார்.