புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியுள்ளனர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு நாளன்று டெல்லியை முற்றுகையிட்டும், அனைத்து மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டும் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
அதற்கு முன்னோட்டமாக இன்று டெல்லியைச் சுற்றி நான்கு எல்லைகளிலும் டிராக்டர் பேரணி நடத்தினர். அரியானாவில் பால்வால் என்னுமிடத்தில் இருந்து சிங்கு, திக்ரி சோதனைச்சாவடிகள் வரை டிராக்டர் பேரணி நடைபெற்றது. உத்தரப்பிரதேச விவசாயிகள் டிராக்டர்களில் நொய்டா வரை செசட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டிராக்டர் பேரணின்று பின்னர் காசியாபாத்துக்குத் திரும்பினர்.