பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் மூன்று நிறுவனங்கள் மோசடியானவை என்று பாரத ஸ்டேட் வங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ரிலயன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் இன்ஃபராடெல் ஆகிய மூன்று வங்கிக் கணக்குகள் மூலம் பெறப்பட்ட 49 ஆயிரம் ரூபாய் கோடி கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை.
வாராக்கடன்கள் காரணமாக குறிப்பிட்ட நிறுவனங்களை மோசடி நிறுவனங்களாக அறிவித்த பின்னர் இந்த வங்கிக்கணக்குகளை முடக்கவும் சிபிஐ விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு வங்கிகளுக்கு ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது . எனவே மறுவிசாரணை வரை தற்போதைய நிலையைத் தொடரும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.