மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்காததையடுத்து இன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை வழியாக இந்த டிராக்டர் செல்ல உள்ளதால் டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று போக்குவரத்து பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
சரக்கு வாகனங்கள் அதிகளவில் செல்லும் 135 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நான்குவழிச்சாலை டெல்லியுடன் உத்தரப்பிரதேசம்-ஹரியானா மாநிலங்களை இணைக்கிறது.
குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு முன்னோட்டமாக இன்றைய போராட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.