கேரளாவில் பரவியுள்ள பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உயர்மட்ட நிபுணர் குழுவினரை கோட்டயம் மற்றும் ஆழப்புழா மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இருமாவட்டங்களிலும் 24 ஆயிரம் வாத்துகள் உயிரிழந்ததாகவும், அடுத்த 10 நாட்களுக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று கேரள அமைச்சர் ராஜூ தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றின் விற்பனைக்குத் தடை நீடிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 45 ஆயிரம் வாத்துகளும் கோழிகளும் இதனால் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இன்றுடன் பறவைகளைக் கொல்லும் நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஹரியானாவுக்கும் இத்தகைய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.