மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின், தமிழ்நாட்டு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷா, அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றார். இந்நிலையில், பொங்கலன்று அமித் ஷா சென்னை வர இருப்பதாகவும், அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேசக்கூடும் என்றும், ரஜினியை சந்திப்பார் என்றும் தகவல்கள் பரவியிருந்தன. இந்தச்சூழலில், அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.