இந்திய ராணுவத்திற்காக 758 கோடி ரூபாய் செலவில் கனரக வாகனங்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து, பொதுத்துறையை சேர்ந்த பிஇஎம்எல் நிறுவனம் பெற்றுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட்டு ஓராண்டிற்குள் வழங்கப்பட உள்ளன. போரிடுவதற்கான கவச வாகனங்கள், படை வீரர்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரங்கள் மற்றும் கடினமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.