மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி முக்கிய பொருளாதார நிபுணர்களுடனும், துறை சார்ந்த வல்லுநர்களுடனும் நாளை மறுநாள் காணொலியில் விவாதிக்க உள்ளார்.
நிதி ஆயோக் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதன் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 5 சதவிகிம் அளவுக்கு குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ஆனால் அது 10.3 சதவிகிதம் வரை செல்லும் என சர்வதேச நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது குறித்த ஆலோசனைகளை, பொருளாதார நிபுணர்களிடம் மோடி கேட்டறிவார் என கூறப்படுகிறது.