சட்டவிரோத மதமாற்ற தடை சட்டங்கள் சட்டபூர்வமானவையா? என உச்ச நீதிமன்றம் ஆராய உள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள், லவ் ஜிஹாத் என அழைக்கப்படும் மதமாற்ற திருமணங்களுக்கு எதிராக சட்டம் இயற்றி உள்ளன. இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்பதுடன், அதன் அடிப்படைத் தன்மையையே குலைக்கக் கூடியது என உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கலாயின.
இந்த வழக்குகளில், சம்பந்தப்பட்ட இரண்டு மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.