பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதன் இறுதிக் கட்ட கிளினிகல் சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பங்கேற்பாளர்களின் சம்மதம் பெற்ற பிறகே இந்த சோதனை நடத்தப்பட வேண்டும் எனஅவர் கூறினார். கோவாக்சின் போடப்பட்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தொற்று காலத்தில் இறுதிக்கட்ட சோதனைகளுக்கு முன்னரே தடுப்பூசிக்கு அனுமதி வழங்க சட்ட ரீதியான வழிமுறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.