டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க இயலாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதை அடுத்து, 1966 க்குப் பிறகு முதன் முதலாக வெளிநாட்டு தலைவர் இல்லாத குடியரசு தின அணிவகுப்பு நடக்கிறது.
வழக்கமாக குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு பல மாதங்கள் முன்னதாகவே அதில் பங்கேற்க உள்ள வெளிநாட்டுத் தலைவர் முடிவு செய்யப்பட்டு அதற்கான அழைப்பு அனுப்பப்படும்.
அந்த வகையில் போரிஸ் ஜான்சனுக்கு இந்த ஆண்டுக்கான அழைப்பு அனுப்பப்பட்டது.
அதை அவர் ஏற்றாலும்,பிரிட்டனில் மரபணு மாற்ற வைரஸ் பரவுவதால் அவர் தமது பயணத்தை ரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.