டிசம்பர் மாதம் பாஸ்டேக் மூலம் பெறப்பட்ட நெடுஞ்சாலைச் சுங்கக் கட்டண வருவாய் இரண்டாயிரத்து 304 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜனவரி 1 முதல் நெடுஞ்சாலைச் சுங்கக் கட்டணம் செலுத்த அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் பயன்படுத்த வேண்டும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
பின்னர் பிப்ரவரி 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்திய நடவடிக்கை 13 கோடியே 84 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இரண்டாயிரத்து 304 கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது. இது நவம்பர் மாதத்தைவிட 201 கோடி ரூபாய் அதிகமாகும்.