மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைவர் கட்சியில் இல்லாததை காங்கிரஸ் தலைமை உணரத் தவறியதுதான், தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அவர் எழுதிய தி பிரெசிடென்சியல் இயர்ஸ் புத்தகத்தில், 2014 தேர்தலில் மக்கள் குழப்பமில்லாத தீர்க்மான முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக தான் சார்ந்திருந்த கட்சி தோல்வியடைந்தது ஏமாற்றமளித்ததாக கூறிய பிரணாப், காங்கிரசில் மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைவர் இல்லை என்பதை கட்சித் தலைமை உணரவில்லை என கூறியுள்ளார். தமது பதவிக்காலத்தில் பிரதமர் மோடியுடன் சுமுக உறவு இருந்ததாக பிரணாப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.