வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் மின்னணு முறையில் தபால் வாக்களிக்கும் நடைமுறை குறித்து ஆலோசனை நடத்தலாம் என தேர்தல் ஆணையத்திற்கு வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து துறையினரிடமும் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போதைய சட்டப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் தங்களுடைய தொகுதிகளில் நேரில் வாக்களிப்பதற்கு வகை செய்கிறது.
வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.